World

dec12

கட்டிடங்கள் இடிந்து விழுந்து மொரோக்கோவில் 19 பேர் பலி

மொரோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் நான்கு மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் மொரோக்கோ சந்தித்துள்ள மோசமான இரண்டாவது கட்டட விபத்து இதுவாகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நான்கு மாடிகளைக் கொண்ட இந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இடிபாடுகளில் 16 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேடுதல் மற்றும் […]

கட்டிடங்கள் இடிந்து விழுந்து மொரோக்கோவில் 19 பேர் பலி Read More »

earthquake 60fe36a405616 800x445

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று (12) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக கடல் அலைகள் 1 மீற்றர் (39 அங்குலம்) வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  கடந்த திங்கட்கிழமையும் அதே பிராந்தியத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. 

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Read More »

dec 11 2

கடல்சார், வான்வெளி கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் – ஜப்பான் பிரதமர்

கடல்சார் மற்றும் வான்வெளி கண்காணிப்பை வலுப்படுத்தவும் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் தனது நாடு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று ஜப்பானின் பிரதமர் சானே தகைச்சி தெரிவித்துள்ளார். ஒகினாவா தீவுகளுக்கு அருகில் ஜப்பானிய போர் விமானங்களுக்கு ரடார் வெளிச்சம் பாவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சீனத் தூதுவரை அழைத்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தமது ஆட்சேபனைகளை தெரித்த போதிலும் ஜப்பானின் குற்றச்சாட்டுக்களை சீனா முற்றிலும் நிராகரித்துள்ளது. இது

கடல்சார், வான்வெளி கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் – ஜப்பான் பிரதமர் Read More »

dec 11

சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து: 12 பேர் பலி

தெற்கு சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். குவாங்டாங் மாகாணத்தில் ஷாண்டோ பகுதியில் அமைந்துள்ள 4 அடுக்குகளைக் கொண்ட மாடி குடியிருப்பில் நேற்று முன்தினமிரவு 9.20 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் அரை மணிநேரம் கொளுந்து விட்டு எரிந்த இந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்துள்ளனர். இத்தீவிபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4

சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து: 12 பேர் பலி Read More »

44536880 0

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து

விபத்தில் 57 வயது பெண் காயமடைந்தார் வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார்.  அப்போது, விமானம் சாலையில் சென்ற கார் மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி சென்ற 57 வயது பெண் லேசான

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து Read More »

dec 10

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளத் தடை: ஆஸ்திரேலியாவின் அதிரடிச் சட்டம்!

ஆஸ்திரேலிய அரசு இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உலகத்தில் முதன்முறையாக மிகக் கடுமையான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, 16 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் எந்த சமூக ஊடகத்திலும் கணக்கு உருவாக்கவோ, பயன்படுத்தவோ முடியாது. ஏற்கனவே கணக்கு வைத்துள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கணக்குகள் அவை அமலுக்கு வரும் நாளிலிருந்து தானாகவே நீக்கப்படும். Meta, TikTok, Snapchat, YouTube போன்ற நிறுவனங்கள் இதற்கான தயாரிப்புகளில் இறங்கியுள்ளன. இந்தச் சட்டம் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளத் தடை: ஆஸ்திரேலியாவின் அதிரடிச் சட்டம்! Read More »

9

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்கும் நெட் பிளிக்சின் முடிவு, மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் படங்களை தயாரிப்பதிலும், விநியோகத்திலும் நூற்றாண்டுக்கு மேலாக கோலோச்சி வந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, 83 பில்லியன் டொலருக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், தயாரித்த திரைப்படங்கள், வெப் சீரிஸ், டிசி காமிக்ஸ் படங்கள் மற்றும் ஹெச்பிஓ ஓடிடி

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை Read More »

dec 9 2

ஆப்கான் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் படையினருக்கும் இடையில் எல்லையில் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இம்மோதல்களின் விளைவாக நான்கு உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகத் காந்தஹார் நகரத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ ஊழியர் தெரிவித்துள்ளார். இம்மோதலின் போது மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பாகிஸ்தான் தரப்பில் மூன்று பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இம்மோதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் நகரில் இருந்து மக்கள் இரவோடு இரவாக வெளியேறியுள்ளனர். குறிப்பாக பெரும்பாலானவர்கள் கால் நடையாகவும் வாகனங்களிலும்

ஆப்கான் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் Read More »

dec 9

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: ஒருவர் பலி; 40 வீடுகள் எரிந்து நாசம்

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 40 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு தீயணைப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு 52 இடங்களில் எரிந்துகொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்பது இடங்களில் புதிதாக தீ ஏற்பட்டிருக்கின்றது. இந்த மாகாணத்தில் கடந்த வார இறுதியில் 20 வீடுகள்  எரிந்து நாசமாகின. டால்பின் சாண்ட்ஸ் கடலோரப் பகுதியில் காட்டுத் தீயால் 19 வீடுகள் எரிந்துள்ளன. இங்கு காட்டுத்

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: ஒருவர் பலி; 40 வீடுகள் எரிந்து நாசம் Read More »

dec 8 2

சீனா மீது விதிக்கத் திட்டமிட்ட தடைகளை நிறுத்திய அமெரிக்கா

சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சு மீது விதிக்கத் திட்டமிட்டிருந்த தடைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சீர்குலைவதைத் தவிர்க்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகையில், சீனாவின் உளவு முகவரகம் மற்றும் அமெரிக்க தொலைத்தொடர்பு வலையமைப்புக்களில் ஊடுவல் செய்ய பயன்படுத்தப்படும் ஒப்பந்த குழுவாகக் கருதப்படும் சால்ட் டைபூன் என்பவற்றின் மீது தடைகளை விதிக்க அமெரிக்கா ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. எனினும் அமெரிக்க, சீனா ஜனாதிபதிகளுக்கு

சீனா மீது விதிக்கத் திட்டமிட்ட தடைகளை நிறுத்திய அமெரிக்கா Read More »