Sports

novb6

விற்பனைக்கு விடப்பட்டது ஐ.பி.எல் சம்பியன் ஆர்.சி.பி

ஐபிஎல் தொடரில் கிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணியை விற்பனை செய்வதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அணி நிர்வாகம் அறித்துள்ளது. இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், அணிக்கு இரண்டு பில்லியன் டொலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக […]

விற்பனைக்கு விடப்பட்டது ஐ.பி.எல் சம்பியன் ஆர்.சி.பி Read More »

nov6

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

முதல் முறையாக ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்ற, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று (5) இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து அவர்களின் வரலாற்று சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் பிரதமர் மோடி சந்திப்பு Read More »

no4

கத்தாரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை தொடங்கியது

கத்தாரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று(03) Aspire Zone விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 8 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன. நேற்று நடைபெற்ற 8 போட்டிகளில், கத்தார் – இத்தாலி, தென் ஆப்பிரிக்கா – போலிவியா, ஜப்பான் – மொராக்கோ, அர்ஜென்டினா – பெல்ஜியம், துனீசியா – ஃபிஜி அணிகள் போட்டியிட்டன.

கத்தாரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை தொடங்கியது Read More »

nov4

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு

புத்தளம் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற டிவிஷன் 02 20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியால உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியுன் மோதி நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி செம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு Read More »

25 690845560de97

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்படும் கவனச் சிதறல்கள் வீரர்களின் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை பாதிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தங்களது முழு கவனத்தையும் பயிற்சிக்கும், ஆட்டத்திற்கும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். சில காலத்துக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருப்பது அவர்களின் கவனத்தை மீட்டெடுக்க

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். Read More »

nov3

FIFA U17 World Cup Qatar 2025 – இன்றைய போட்டிகள்

FIFA U17 உலகக் கோப்பை 2025 தொடர் இன்று (நவம்பர் 3) திங்கட்கிழமை தோஹா Aspire Zone மைதானங்களில் நடைபெறுகிறது. கத்தார் – இத்தாலி, தென் ஆப்பிரிக்கா – போலிவியா, ஜப்பான் – மொராக்கோ, அர்ஜென்டினா – பெல்ஜியம், துனீசியா – ஃபிஜி உள்ளிட்ட சுவாரஸ்யமான ஆட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. போட்டிகள் தோஹா நேரப்படி பிற்பகல் 3.30 மணி முதல் 6.45 மணி வரை தொடங்கவுள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து இளம் திறமைகள் களமிறங்கும் இந்தப் போட்டிகள் ரசிகர்களிடையே

FIFA U17 World Cup Qatar 2025 – இன்றைய போட்டிகள் Read More »

novb1

வளர்ந்து வரும் நட்சத்திர ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் கத்தாரில்

ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் 2025 வளர்ந்து வரும் நட்சத்திர ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் (Asia Cup Rising Stars) நவம்பர் 14 முதல் 23 வரை கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக இப்போட்டித் தொடர் வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் சுற்றில் இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு

வளர்ந்து வரும் நட்சத்திர ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் கத்தாரில் Read More »

nov1

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: ஷஃபியா யாமிக் உள்ளிட்ட 18 வீரர்களுக்கு இலங்கை இராணுவத்தால் பதவி உயர்வு

இந்தியாவின் ராஞ்சியில் கடந்த ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று முன்தினம் (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர். இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றதுடன், ,அதில் 30 பேர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.அந்த இராணுவ வீர வீராங்கனைகள்

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: ஷஃபியா யாமிக் உள்ளிட்ட 18 வீரர்களுக்கு இலங்கை இராணுவத்தால் பதவி உயர்வு Read More »

sri lanka army athletes outstanding achievements

தடகள போட்டிகளில் ஜொலித்த இராணுவத்தினருக்கு தளபதி பாராட்டு

– 18 பேர் அடுத்த தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டனர் – பங்கேற்ற 59 பேரில் 30 பேர் இலங்கை இராணுவத்தினர்– 12 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலங்களை வென்றுள்ளனர் இந்தியா ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர்.இந்த

தடகள போட்டிகளில் ஜொலித்த இராணுவத்தினருக்கு தளபதி பாராட்டு Read More »

இங்கிலாந்தை வீழ்த்தி நியூசி. தொடர் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 2–0 என வென்றது. ஹமில்டனில் நேற்று (29) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததை அடுத்து 36 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் பிளாயர் டிக்னர் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதிலெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஓட்டப் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை இழந்தபோதும் மறுமுனை

இங்கிலாந்தை வீழ்த்தி நியூசி. தொடர் வெற்றி Read More »