Local

fe10

புதிய வரிச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்: விரைவில் வர்த்தமானியில் வெளியீடு!

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 2025-05-19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி […]

புதிய வரிச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்: விரைவில் வர்த்தமானியில் வெளியீடு! Read More »

f9

கூ. மொ. விற்பனை நிலைய நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மாதாந்தம் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.அநுராதபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் தெரிவித்த அமைச்சர்; கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவுக்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சம்

கூ. மொ. விற்பனை நிலைய நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி Read More »

feb 9

ஆசிரியர் போட்டிப் பரீட்சை வர்த்தமானியில் திகதியை மாற்றுங்கள்

– ஜூன் 30, 2025 இற்கு பிறகு பட்டம் பெற்ற இளைஞர்கள் உள்வாங்கப்படவில்லை தற்போதைய அரசால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளன. ஆகையினால் இந்தப்

ஆசிரியர் போட்டிப் பரீட்சை வர்த்தமானியில் திகதியை மாற்றுங்கள் Read More »

feb8

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகின்றன கடந்த காலங்களை விட தற்போது கணிசமான அளவு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனவே, இந்தக் குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் பொலிஸ்

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு அமைச்சர் அதிரடி அறிவிப்பு! Read More »

fe8

10,000 ரூபாவிற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி: கூட்டுறவு விற்பனை நிலையங்களில் புதிய சலுகை

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்தக் காப்புறுதி நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும், அது மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது எனவும் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையில், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்புறுதி வழங்க

10,000 ரூபாவிற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி: கூட்டுறவு விற்பனை நிலையங்களில் புதிய சலுகை Read More »

1001343926 1170x523

குச்சவெளி பிரதேசத்தின் பொதுச் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல்!

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி மற்றும் கோழிறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு பொதுச் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) இடம்பெற்றது. குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், குச்சவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சயோலிபன் கலந்துகொண்டு பொதுச் சுகாதாரம் தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கி வைத்தார். கடை உரிமையாளர்கள் தங்களின் கடைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் கழிவுகளை எவ்வாறு அகற்ற வேண்டும்

குச்சவெளி பிரதேசத்தின் பொதுச் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல்! Read More »

fe7

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரையில் பாரிய சிரமதானப்பணி

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பொலிஸ் மற்றும் படையினரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கமைவாக கல்குடா பொலிஸாரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர், மட்டக்களப்பு கடற்படையினர் இ உல்லாச விடுதிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று 07.02.2026 முன்னெடுக்கப்பட்ட பாரிய சிரமதானப்பணி மூலமாக பாசிக்குடா யானைக்கல் மலைப்பகுதியின் கடற்கரைப்பிரதேசம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது.உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்ஸ். ஜறூலின் மேற்பார்வையில் கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிஹான் டிலங்கவின் தலைமையில் இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரையில் பாரிய சிரமதானப்பணி Read More »

feb7

திட்வா புயலால் அனாதையான 103 குழந்தைகள்! அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்!

திட்வா காரணமாக 103 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.குறித்த சிறுவர்களை பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பிரிதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு பலர் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் சிறுவர்கள் குறித்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி, நீதிமன்ற உத்தரவிற்கமைய

திட்வா புயலால் அனாதையான 103 குழந்தைகள்! அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்! Read More »

jayanika rambukwella 1200x675px 20 06 25 1170x658

கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல பணத் தூய்தாக்கம் தொடர்பான குற்றச்சாட்டில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 300 இலட்சம் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது Read More »

olexam 1170x658

2025 O/L பரீட்சை; பெப். 11 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

– பெப். 17 – 26 வரை பரீட்சைகள் இடம்பெறும் 2025 O/L பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதால் அது தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3545 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. சாதாரண தரப் பரீட்சை பாடவிதானங்கள் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் 11ஆம்

2025 O/L பரீட்சை; பெப். 11 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை Read More »