சுதந்திர தினத்தை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரையில் பாரிய சிரமதானப்பணி

fe7

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பொலிஸ் மற்றும் படையினரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கமைவாக கல்குடா பொலிஸாரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர், மட்டக்களப்பு கடற்படையினர் இ உல்லாச விடுதிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று 07.02.2026 முன்னெடுக்கப்பட்ட பாரிய சிரமதானப்பணி மூலமாக பாசிக்குடா யானைக்கல் மலைப்பகுதியின் கடற்கரைப்பிரதேசம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது.
உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்ஸ். ஜறூலின் மேற்பார்வையில் கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிஹான் டிலங்கவின் தலைமையில் இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் நோக்குடன் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலத்திட்டங்களுக்கமைவாக இலங்கைத்திருநாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கிணங்க இச்சிரமதானப் பணியினை மேற்கொண்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபை இதற்கான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.
பாசிக்குடாவில் கரையொதுங்கியுள்ள கழிவுகளை நோக்கும்போது வெளிமாவட்டங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களாகக் காணப்பட்டன. இதனால் பொதமக்கள் சுற்றாடல் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய விழிப்புணர்வு அற்றுக்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.