– ஜூன் 30, 2025 இற்கு பிறகு பட்டம் பெற்ற இளைஞர்கள் உள்வாங்கப்படவில்லை
தற்போதைய அரசால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளன. ஆகையினால் இந்தப் பட்டம் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து புதிய வர்த்தமானி வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆசிரியர் சேவை வர்த்தமானியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் நேற்று (08) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
வர்த்தமானிகளை வெளியிடுவதற்கு முன்னர் தொழில் இல்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்டறியுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். எனவே, இந்த ஆசிரியர் போட்டிப் பரீட்சை வர்த்தமானியில் காணப்படும் பிரச்சினைக்குரிய நிலையை இல்லாமலாக்கி, 2025 டிசம்பர் மாதம் வரை பட்டப் படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானியை திருத்துமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது மேலும் தெரிவித்தார்.


