Local

july 19

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்

37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் நேற்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார். கற்பிட்டி, சஞ்சிதாவத்தையில் வசித்து வரும் இவர் மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலையில் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தை பெற்று 1988 ஆம் ஆண்டு 08 ஆம் மாதம் 06 ஆம் திகதி தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா போன்ற பாடசாலைகளில் அதிபராக, […]

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன் Read More »

july 17

பாடசாலைச் சீருடைக்காக 5171 மில்லியன் பெறுமதியான துணிகளை வழங்குகிறது சீனா

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான துணி முழுவதும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று (16) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, 2025 ஆம் ஆண்டிற்கான முழு சீருடைத் தேவையும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கும் சான்றிதழ்கள் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாடசாலைச் சீருடைக்காக 5171 மில்லியன் பெறுமதியான துணிகளை வழங்குகிறது சீனா Read More »

july 16

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சில கிராமப்புறப் பாடசாலைகளில் அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். இருப்பினும், ஆசிரியர் பற்றாக்குறையை கொண்ட பிற பாடசாலைகள் உள்ளதாகவும் இந்த பற்றாக்குறை நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வி

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு Read More »

july 15

மாகாண சபை தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும்

மாகாண சபை தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் July 15, 2025 பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் தயாராக இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்கள் நேற்று (14) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்வித் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு பல புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம்.

மாகாண சபை தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் Read More »

july 13

விபத்தில் சிக்கிய டிலானின் வாகனம்..! மூவர் காயம்..!

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த வாகனம் தெற்கு அதிவேக வீதியின் கலனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதும் ஏற்படவிலை. இருப்பினும் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

விபத்தில் சிக்கிய டிலானின் வாகனம்..! மூவர் காயம்..! Read More »

july 11

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகள் டிஜிட்டல் மயம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலாமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்யை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி வைபவம் பத்தரமுல்லையில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 09.07.2024 நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி யமதா டெஸ்டிதுயா கிளைமக்ஸ் இன்டநெசனல்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகள் டிஜிட்டல் மயம் Read More »

july 10

மின் கட்டண குறைப்பு; ஜுலை 15 ல் இறுதித் தீர்மானம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்பட்ட கட்டணங்களின்

மின் கட்டண குறைப்பு; ஜுலை 15 ல் இறுதித் தீர்மானம் Read More »

july 9

சாய்ந்தமருதில் நீர் இணைப்புக்காக சேதமாக்கப்பட்ட  வீதிகளை சீரமைக்குமாறு   இலங்கை நீதிக்கான மைய்யம் கோரிக்கை..!

கல்முனை மாநகர சபை பிரதேசத்தினுள் புதிய நீர் இணைப்புக்காக மாநகரசபையின் அனுமதி பெற்று சேதமாக்கப்பட்ட கொங்கிரீட் வீதிகள் இன்னும் சீர் செய்யப்படாததால் மக்கள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என்று இலங்கை நீதிக்கான  மய்யம் குற்றம்சாட்டி உள்ளது. இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஸஹ்பி எச்.இஸ்மாயில் இது விடயமாக  குறிப்பிடும் போது; இவ்வாறான புதிய நீர் மின் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக சேதம் செய்யப்படும் பாதையினை

சாய்ந்தமருதில் நீர் இணைப்புக்காக சேதமாக்கப்பட்ட  வீதிகளை சீரமைக்குமாறு   இலங்கை நீதிக்கான மைய்யம் கோரிக்கை..! Read More »

july 8

30 வீதத்தால் மின் கட்டணம் குறைப்பு..! 18 முதல் அமுல்..!

மின்சார கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

30 வீதத்தால் மின் கட்டணம் குறைப்பு..! 18 முதல் அமுல்..! Read More »

july 6

முஹர்ரம் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (06) சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும். இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஹர்ரம் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று Read More »