Local

1000873139 1170x658

துரிதகதியில் இடம்பெற்றுவரும் வட்டுவாகல் பாலத்திற்கான வேலைகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி துரிதகதியில் சீரமைக்கப்பட்டு வருகின்றது. நாடெங்கிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியான முறையில் பெய்த மழை மற்றும் காற்றினால் குளம், கடலின் நீர்மட்டமானது வழமையை விட உயர்வடைந்திருந்தது. இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் குறித்த பாலம் பகுதியளவில் சேதமடைந்தது. இதனால் குறித்த பாலத்தினுடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிக வீதி புனரமைப்பின் மூலம் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. இந்நிலையில் […]

துரிதகதியில் இடம்பெற்றுவரும் வட்டுவாகல் பாலத்திற்கான வேலைகள் Read More »

8a41faea ac9a 45f6 9502 cfbf6e0fce56

இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று (18) இந்தியா பயணமானார்கள். இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக்குழு இந்தியா

இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம் Read More »

617233718 1376727434496682 1104740703861064230 n

போதைக்கு அடிமையான உங்கள் பிள்ளையை புனர்வாழ்வு நிலையங்களுக்கு ஒப்படையுங்கள்

– நீங்கள் எதிர்பார்க்கும் பிள்ளையை மீள ஒப்படைப்போம் அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது

போதைக்கு அடிமையான உங்கள் பிள்ளையை புனர்வாழ்வு நிலையங்களுக்கு ஒப்படையுங்கள் Read More »

616807266 122207409344551053 6088784630322262224 n 1 1170x828

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர்

-சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் Read More »

1.17

Day 02: Lanka Ride கடற்படை வீரர் முன்னிலை

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள ‘லங்கா ரைட்’ (Lanka Ride) தேசிய மட்டத்திலான சைக்கிள் சவாரியின் இரண்டாம் நாள் போட்டி இன்று (17 ஆம் திகதி) வெற்றிகரமாக இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வும் கௌரவிப்பும் இன்றைய இரண்டாம் கட்டப் போட்டி காலை 9 மணிக்கு கன்னொருவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் ஆரம்பமானது. நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்

Day 02: Lanka Ride கடற்படை வீரர் முன்னிலை Read More »

1,17

ஹட்டன் பிரதான வீதியில் லொறி – வேன் மோதி விபத்து; இருவர் படுகாயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன்

ஹட்டன் பிரதான வீதியில் லொறி – வேன் மோதி விபத்து; இருவர் படுகாயம் Read More »

1.16

வெலிகம ஹிழ்ரிய்யா மாணவி 03ஆம் இடம்

இலங்கையிலுள்ள சவுதி அரேபியா தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய தேசிய மட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெலிகம அறபா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 7இல் கல்வி கற்கும் ஹபீபா அஸ்லம், அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை சுவீகரித்து பெருமை சேர்த்துள்ளார். இம் மாணவி வெலிகம ஹிழ்ரிய்யா அறபுக் கல்லூரி பெண்கள் பிரிவில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெலிகம ஹிழ்ரிய்யா மாணவி 03ஆம் இடம் Read More »

1,16

அதிக விலைக்கு அரிசிவிற்ப​னை: 3 வர்த்தகர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜா-எல மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்த இந்த வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி ஒரு கிலோ அரிசியை 308, 275 மற்றும் 280

அதிக விலைக்கு அரிசிவிற்ப​னை: 3 வர்த்தகர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் அபராதம்! Read More »

nw04

மன்னார் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

-2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நாட்டில்,2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோல்ட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.Hayleys Fentons Limited நிறுவனம் இத்திட்டத்தை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ

மன்னார் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் Read More »

616839409 1375672194602206 1531789016175389952 n

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும்  அவற்றையெல்லாம் தகர்த்தெறிவோம்

“நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலனை மற்றும் மானிப்பாய் பகுதிகளில் நேற்று (15) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்புடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, ”இலங்கையில் டிட்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும்  அவற்றையெல்லாம் தகர்த்தெறிவோம் Read More »