Local

gmoa 1170x588

கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

– நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமைக்கு கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், ‘குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு […]

கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு Read More »

1.22

“கல்விக்கு கரம் கொடுப்போம்” – 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகளிடம் குறித்த கற்றல் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், பயிற்சி

“கல்விக்கு கரம் கொடுப்போம்” – 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் Read More »

1,22

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.மசூத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க அவர்களால் இன்று (22) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவையில் அனுபவமிக்க வைத்தியராக அறியப்படும் டாக்டர் ஏ.பி.மசூத் அவர்களின் இந்த நியமனம், அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் நிர்வாக செயல்திறன் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை மேலும்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம் Read More »

img 20260121 wa0024

சுற்றுலாத்துறை என்பது ஒரு மென்மையான அதிகாரக் கருவியாகும். – டாவோஸில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பிரதமர் வலியுறுத்து.

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டங்களுக்கு இணையாக, ஜனவரி 20ஆம் திகதி டாவோஸ்(Davos), பிஸ் புய்னில் (Piz Buin) அமைந்துள்ள Euronews மையத்தில் “Tourism as Soft Power and Diplomatic Capital” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகள் ஊடாகச் சர்வதேச நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சுற்றுலாத்துறை எவ்வாறு

சுற்றுலாத்துறை என்பது ஒரு மென்மையான அதிகாரக் கருவியாகும். – டாவோஸில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பிரதமர் வலியுறுத்து. Read More »

3.2 3

குறைகளை நிவர்த்தி செய்து புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்தினால் ஆதரவு

நடைமுறைப்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால், முழுமையான ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயாராக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்: சமூக

குறைகளை நிவர்த்தி செய்து புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்தினால் ஆதரவு Read More »

school holiday

பாடசாலை விடுமுறை விபரங்கள்

அரச பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டு விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைவாக அரசாங்க பாடசாலைகள் இன்று (21) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் ஆரம்ப கட்டம் இன்று (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் மார்ச் 02 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 03

பாடசாலை விடுமுறை விபரங்கள் Read More »

nu

நுவரெலியாவில் கடும் குளிர்:7.4 °C குறைந்த வெப்பநிலை பதிவு!

இன்று (21) அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும், பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதுடன், அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச

நுவரெலியாவில் கடும் குளிர்:7.4 °C குறைந்த வெப்பநிலை பதிவு! Read More »

1,,21

மத்திய ஆபிரிக்கக் குடியரசு அமைதி காக்கும் பணிக்காக இலங்கை விமானப்படை புறப்பட்டது!

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்று (21) காலை அந்தக்குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த குழுவிற்கு கட்டளை அதிகாரியாக குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே செயற்படுகின்றார். ​ அதில் இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை வீராங்கனைகள் உட்பட மொத்தம் 110 விமானப்படை உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைதிக்காக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த

மத்திய ஆபிரிக்கக் குடியரசு அமைதி காக்கும் பணிக்காக இலங்கை விமானப்படை புறப்பட்டது! Read More »

1,21

டித்வா புயல்: – மரணச் சான்றிதழ் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

‘டித்வா’ புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும் சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

டித்வா புயல்: – மரணச் சான்றிதழ் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! Read More »

1.20

பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு!

– மத்திய வங்கியின் 5% இலக்குக்குக் கீழ் பணவீக்கம் வீழ்ச்சியடைந்ததால் நடவடிக்கை பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளைத் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எட்டத் தவறினால், அது குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட வேண்டும். 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் 5% ஆக இருக்க வேண்டிய பணவீக்கம், முறையே -1.1% மற்றும் 0.8% ஆகக்

பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு! Read More »