Local

6.21

இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் 23 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Read More »

6.20

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19 இடம்பெற்று இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாரா மன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெவ்வை, ஏ.ஆதம் வாவா உட்பட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கடற்படை தளபதிகள் உட்பட மீன்பிடி அமைச்சின் உயர்

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் Read More »

6.18

நுவரெலிய மாநகர சபையை வென்றது தேசிய மக்கள் சக்தி

நுவரெலியா மாநகராட்சி மேயராக தேசிய மக்கள் சக்தியின் உபாலி வணிகசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய மக்கள் சக்தி சார்பாக உபாலி வணிகசேகர, சுயேட்சை குழு சார்பாக அஹகம ராமநாயகலாகே அஜித் குமார ஆகியோர் போட்டியிட்டனர். திறந்த வாக்கெடுப்பில் 14 வாக்குகளை பெற்று சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட உபாலி வணிகசேகர தெரிவு

நுவரெலிய மாநகர சபையை வென்றது தேசிய மக்கள் சக்தி Read More »

6.16

ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது. இதில், ஓட்டமாவடி -2 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எச்.எம்.பைறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்து தவிசாராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பிரதி தவிசாளராக மாஞ்சோலை – பதுரியா நகர் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு

ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு Read More »

6.15

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22/06/ 2025 அன்று காலை 9:00 மணிக்கு பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.சீ.எம் ஹம்ஸா தலைமையில், கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி – பீ ஏ)யின் வழிகாட்டலில், கலாபீட அதிபர் மெளலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முஅய்யிதி)யின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளது. 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் 10 மௌலவிமார்கள் பட்டம்

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு Read More »

6.14

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களின் தலைமையில் நேற்று (13.06.2025) திருகோணமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், திருகோணமலை மாவட்டத்தில்

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு Read More »

6.13

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இயந்திரம் செயலிழப்பு

நுரைச்சோலையில் உள்ள 3ஆவது மின் உற்பத்தி நிலையம் இன்று (13) நள்ளிரவு முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என்று மின்சாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, பழுதுபார்ப்பு பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தேசிய மின்சார கட்டமைப்பு 300 மெகாவாட் மின் உற்பத்தியை இழக்கும். இருப்பினும், 2 மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பதால், மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இயந்திரம் செயலிழப்பு Read More »

6.9

வட மத்திய மாகாணத்துக்கான சீ.ஐ.டி அலுவலகம் திறப்பு

வடமத்திய மாகாணத்திற்கான குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகம் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய ஆகியோரின் தலைமையில் அனுராதபுரத்தில் (08) திறந்து வைக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு குற்றப்புலனாய்வுத்  துறையின் செயற்பாடுகளை மேலும் திறம்படச் செய்வதற்காக மாகாண மட்டத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவுகளை ஒரு படியாக வடமத்திய மாகாணத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பிரிவு நிறுவப்பட்ட பிறகு பொதுமக்கள்

வட மத்திய மாகாணத்துக்கான சீ.ஐ.டி அலுவலகம் திறப்பு Read More »

6.7

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று (07) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகின்றது. மதம், மானிட சமூகத்தை மனித நேயத்துடன் பூரணப்படுத்தவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து வருகை தருகின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் இறைவனை வணங்குவதற்காக மக்காவிற்கு வரும்

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி Read More »

6.6

பல பகுதிகளில் மின்வெட்டு

பியகம – பன்னிப்பிட்டிய பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பல பகுதிகளில் மின்வெட்டு Read More »