புரூக்கின் விமர்சனத்தை நிராகரித்தார் அசலங்க

jan27

கொழும்பு, ஆர். பிரேமதாச ஆடுகளத்தை மிக மோசமானதாக குறிப்பிட்ட இங்கிலாந்து அணித் தலைவர் ஹரி புரூக்கின் விமர்சனத்தை இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க நிராகரித்துள்ளார். ஆடுகளம் தொடர்பில் அவ்வாறான மதிப்பீடு என்னிடம் இல்லை என்று நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இரு அணிகளும் இந்த ஆடுகளத்தில் 440 இற்கு மேல் ஓட்டங்களை பெற்ற நிலையில் இதனை எவ்வாறு ஒரு மோசமான ஆடுகளம் என்று குறிப்பிட முடியும் என்று அசலங்க கேள்வி எழுப்பினார். 2023 இல் பெங்களூரில் வைத்து இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் அந்த அணி இதுபோன்ற ஒரு விமர்னத்தை வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முந்தைய ஊடக சந்திப்பே நேற்று நடைபெற்றது. தொடரை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆடவுள்ளார் என்று அசலங்க உறுதி செய்தார்.