– லங்கா பொஸ்பேற் நிறுவனத்தின் புதிய முயற்சி
லங்கா பொஸ்பேற் நிறுவனத்தால் அகழப்படும், பாறை பொஸ்பேற் வளத்தைப் பயன்படுத்தி உர உற்பத்தி மற்றும் ஏனைய பெறுமதி சேர்ப்புத் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காகக் கோரப்பட்ட பெறுகை அறிவித்தல் கோரல்களின் (EOI) அடிப்படையில், தகுதியுள்ள முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


