சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடி காலம் நீடிப்பு பாராளுமன்றிற்கு

1.27

– 2025 நவம்பர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சலுகை

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகத் தமது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்குச் சலுகை வழங்கப்படிருந்தது.

இதற்கமைய, 2025.11.25 முதல் 2025.12.24 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் குறித்த திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு நீடிக்க கடந்த 2025 டிசம்பர் 17ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குறித்த வர்த்தமானியை பாராளுமன்ற அனுமதிக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.