தாய்லாந்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) புட்சால் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தமது முதல் போட்டிகளை சமநிலை செய்துள்ளன. முதல் முறையாக நடத்தப்படும் இந்தத் தொடரில் இலங்கை ஆடவர் அணி நேற்று பூட்டான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை ஆடவர் அணி 3–3 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்தது. அடுத்து இலங்கை ஆடவர் அணி நாளை (16) நேபாளத்தை எதிர்கொள்ளவுள்ளது.
மறபுறம் இலங்கை மகளிர் அணி நேற்று முன்தினம் (13) தனது முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொண்டது. வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை மகளிர் அணியால் போட்டியை 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை செய்ய முடிந்தது.


