தே.ம.சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சிவானந்தராஜா
மலர்ந்துள்ள 2026 தைத்திருநாளானது அனைவருக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியம் மிக்க நன்நாளாக அமைய வேண்டுமெனவும் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புடன் நடந்துகொண்டு ஒன்றுபட்டு இத்தைத்திருநாளை வரவேற்க வேண்டுமெனவும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் வட கொழும்பு அமைப்பாளரும் ஜிந்துப்பிட்டி வட்டாரத்துக்கான பிரஜா சக்தி தலைவருமான என்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்று மலர்ந்துள்ள தைத்திருநாளையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துதுயரத்துடன் வாழ்கின்ற மக்களுக்கு விமோசனம் வழங்குகின்ற திருநாளாக இந்தத் தைத்திருநாள் அமைய வேண்டுமெனவும் சவால்களை வெற்றி கொள்வதற்கு மக்களுக்கு மன வலிமை கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


