Weather

nov 30

நாடு முழுவதும் ஏற்பட்ட பேரழிவில் 334 பேர் உயிரிழப்பு..! 370 பேர் காணாமல் போயுள்ளனர்..!

நாடு முழுவதும் குறைந்தது 334 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 370 பேர் இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும், அங்கு 88 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளை (71 இறப்புகள்), நுவரெலியா (68 இறப்புகள்) மற்றும் மாத்தளை (23 இறப்புகள்) ஆகியவையும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. நாடு முழுவதும் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் […]

நாடு முழுவதும் ஏற்பட்ட பேரழிவில் 334 பேர் உயிரிழப்பு..! 370 பேர் காணாமல் போயுள்ளனர்..! Read More »

29

டிட்வா தி’மலைக்கு அருகே; தமிழ்நாடு கரையை நோக்கி நகரும் சாத்தியம்

– நாட்டின் பல இடங்களில் இன்றும் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை “Ditwah” தித்வா/டிட்வா எனும் புயலானது நேற்று (28) இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடமேற்காக சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் வட அகலாங்கு 9.0°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.8°E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது வடக்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதுடன், நாளை (30) அளவில் தமிழ்நாடு

டிட்வா தி’மலைக்கு அருகே; தமிழ்நாடு கரையை நோக்கி நகரும் சாத்தியம் Read More »

nov29

சீரற்ற வானிலை: இதுவரை உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை: இதுவரை உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு! Read More »

48

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புமாறு அறிவிப்பு நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக மீனவர்களுக்கான விசேட அறிவிப்பை கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ளது. அந்த வகையில் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் கடற்றொழிலுக்காக அனைத்து வித மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மேற்படி

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் Read More »

july 29

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் Read More »

weather forecast nov 24 2025 1170x737

நாட்டைச் சூழவுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக மாற வாய்ப்பு

– தென்கிழக்கு வங்காள விரிகுடா குறித்து எச்சரிக்கை– பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் மழை இலங்கையைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளையதினம் (25) ஒரு தாழமுக்கமாக மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையதினம் (23) நாட்டின் வடக்கு, வடமத்திய,

நாட்டைச் சூழவுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக மாற வாய்ப்பு Read More »

whatsapp image 2025 11 24 at 11.12.22 am

இன்று பல இடங்களில் 100 மி.மீ கன மழை!

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப்

இன்று பல இடங்களில் 100 மி.மீ கன மழை! Read More »

july 29

மழை அதிகரிக்கும் சாத்தியம்.

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  இதன் காரணமாக, வடக்கு மற்றும் வடமத்திய

மழை அதிகரிக்கும் சாத்தியம். Read More »

rainy

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல்

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை! Read More »

july 29

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு Read More »