“புதிய அலை கலை வட்டம்” அங்கமான “நல உதயம் அமைப்பை” மீளுருவாக்கம்.

img 20260427 wa0026

கலை, கலாசாரம் மற்றும் சமூக சேவைகளில் கடந்த 46 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் “புதிய அலை கலை வட்டம்” அதன் ஓர் அங்கமான “நல உதயம் அமைப்பை” மீளுருவாக்கம் செய்துள்ளது. இது அர்த்தமுள்ள மற்றும் சமூகப் பயனுடைய நிகழ்வொன்றை நேற்று (26.4) வத்தளை நகர மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கிராமிய மரபுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது.

பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகளில் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டது.

இப்போட்டிகள் மக்களிடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான போட்டித் தன்மையை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தன.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, சமூக சேவையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வொன்றையும் நடத்தியது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் மர்யம் ஹாஷிம் உமர் ஆகியோரும் மேலும், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், நகர சபை உறுப்பினர் விஜயகுமார், பிரபல பேச்சாளரும் இலக்கிய வாதியுமான பி. எஸ். செல்வரட்ணம், தொழில் அதிபரும் வாழ்வியல் மேம்பாட்டு பேச்சாளருமான டாக்டர் விஜயசிறி சந்திரமோகன் மற்றும் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை அங்கவீனமுற்றஉள்ள குடும்பஸ்தர் ஒருவருக்கு இரு கால்களையும் பொருத்துவதற்கான நிதி உதவிகளும் இதன் போது பலரினால் முன் வந்து வழங்கப்பட்டது நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக பேசப்பட்மை குறிப்பிடத்தக்கது.