கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய புதிய ஜனாஸா வாகனம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
மக்கள் பங்களிப்புடன் கூடிய பாரிய திட்டம்இந்த வாகனம் கொள்வனவு செய்யப்படுவதற்காக கஹட்டோவிட்ட, குரவலான, ஓகொடபொல மற்றும் உடுகொடை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், நலன்விரும்பிகள் மற்றும் தனவந்தர்கள் ஒன்றிணைந்து நிதிப் பங்களிப்பு செய்திருந்தனர்.
குறிப்பாக:சிறுவர்கள் தமது சேமிப்பு உண்டியல்கள் மூலம் வழங்கிய பங்களிப்பு.தனிநபர்கள் வழங்கிய 100 ரூபாய் முதற்கொண்ட சிறு நிதி உதவிகள்.தனவந்தர்கள் மற்றும் பரோபகாரிகளின் பாரிய நிதியுதவிகள்.இப்பணியில் ஜனாஸா கமிட்டியின் தலைவர் மொஹம்மத் Azfer (அப்பர்) தலைமையிலான குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கலந்துகொண்ட முக்கிய விருந்தினர்கள்இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அத்தனகல்ல நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ, கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மேலும், பாடசாலை அதிபர்கள், அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர்கள், கதீப்மார்கள், நிர்வாகிகள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
”நீண்டகாலமாக நிலவி வந்த இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உழைப்பாலும், நிதியாலும், ஆலோசனைகளாலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.” என நிகழ்வின் போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவில் வருகை தந்திருந்த அனைவருக்கும் கஞ்சு விநியோகிக்கப்பட்டதுடன், துஆ மற்றும் ஸலவாத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


