இலங்கைக்கு அபார வெற்றி

a1

ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் சீன தைபே அணிக்கு எதிரான தனது கடைசி குழுநிலைப் போட்டியில் இலங்கை அணி 3–1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது.

ஆசிய கிண்ணத்திற்கான தகுதியை ஏற்கனவே இழந்திருக்கு இலங்கை அணி டி குழுவில் ஆடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வியுடன் இந்த தகுதிகாண் சுற்றை நிறைவு செய்துள்ளது. சீன தைபே தலைநகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் தொட்டு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் இலங்கை சார்பில் தனது கன்னிப் போட்டியில் களமிறங்கிய ராகுல் சுரேஷ் முதல் கோலை புகுத்தியதோடு தொடர்ந்து 26 ஆவது நிமிடத்தில் வைத்து நிலோஷன் சென்துர்வசன் இலங்கை அணி சார்பில் தனது முதல் கோலை பெற்றார். இதன்மூலம் முதல் பாதியில் 2–0 என இலங்கை அணியால் முன்னிலை பெற முடிந்தது. இந்நிலையில் போட்டியின் 53 ஆவது நிமிடத்தில் சீன தைபே வீரர் டியோ பெற்ற ஓன் கோல் இலங்கை அணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக அதிகரித்தது. சீன தைபே சார்பில் யூ யோ ஹிசிங் 55 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற முடிந்தது.