இந்திய பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றி ஆரம்பத்தைப் பெற்றுள்ளது.
19ஆவது ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை (28) பெங்களூரு எம். சின்னசாமி அரங்கில் ஆரம்பமானது. இதில் 202 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கொஹ்லி (ஆட்டமிழக்காது 69) மற்றும் தேவ்தொத் படிக்கல் (61) ஆகியோர் 2ஆவது விக்கெட்டுக்கு 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதன்மூலம் அந்த அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதன்போது பெங்களூரு அணியின் தலைவர் ராஜட் பட்டிடர் 12 பந்துகளில் பெற்ற 31 ஓட்டங்களும் அந்த அணியின் வெற்றிக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஹைத்ராபாத் அணிக்கு அதன் தலைவர் இஷான் கிஷன் 38 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ஓட்டங்களை விளாசினார். மத்திய பின் வரிசையில் வந்த அனிகெட் வர்மா 18 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.


