16,706 கோடி ரூபாவுக்கு விலைபோனது ஆர்சிபி

m26

இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை இந்திய நாணயப்படி 16,706 கோடி ரூபாவுக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியுள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஒப் இந்தியா, பி.எக்ஸ்.பி.இ., போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பே ஆர்சிபி அணியை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியின் உரிமையை இந்த கூட்டமைப்பு பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் ஐ.பி.எல். மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் நடப்பு சம்பியனாக உள்ளன. ஆர்சிபி அணியை வாங்க பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அந்த அணியின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று மற்றொரு ஐ.பி.எல். அணியான ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு இந்திய நாணயப்படி சுமார் 15,300 கோடி ரூபாவுக்கு வாங்கியுள்ளது. கடந்த 2021 முதல் அந்த அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக அவர் உள்ளார்.