(ஜெஸ்மி எம்.மூஸா„ எம் எம் ஜெஸ்மின்)
மருதமுனை தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் அரபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நாளை ஞாயிறு (29) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது கல்லுாரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா நிகழ்வுக்கு ஜம்இய்யத்து அன்சாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தலைவரும்; தாறுத் தௌஹீத் அஸ்-ஸலபிய்யா கலாபீடத்தின் பணிப்பாளருமான என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
ஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் ஏ.எல்.பீர்முகம்மட் ஹாசிமி விஷேட உரையினையாற்றவுள்ளார்.பணிப்பாளர் உரையினை கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி நிகழ்த்தவுள்ளார். கௌரவ, விஷேட அழைப்பாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 169 பேர் பட்டம் பெறவுள்ளனர்.
பட்டமளிப்பு விழா நினைவு மலரொன்றும் இதன் போது வெளியீட்டு வைக்கப்படவுள்ளதுகல்லூரியின் செயலாளர் எம்.பஃறுடீனின் நன்றியுரையுடன் விழா நிகழ்வுகள் நிறைவுறவுள்ளன.



