சுப்பர் 8 சுற்றுக்கான முக்கிய போட்டிகள் நாளை ஆரம்பம்

ma6

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கான 6 ஆவது வாரத்தின் போட்டியில் நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளன.

கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆறாவது வாரத்தின் முதல் போட்டியாக மாவனல்லை, செரண்டிப் அணி, கொழும்பு, நியூ ஸ்டார் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளது. மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி நியூ ஸ்டார் அணிக்கு முக்கியமாகும். அந்த அணி சுப்பர் 8 புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரம் பெற்று 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பொலிஸ் கழகம், ஜாவா லேன் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பொலிஸ் அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 1 வெற்றி 4 தோல்விகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் யாழ்ப்பானம், சென் மேரிஸ் கழகம் அநுராதபுரம், சொலிட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளும் சுப்பர் எட்டு புள்ளிப்பட்டியலில் முறையே 5 மற்றும் 6 ஆவது இடத்தில் உள்ளன.

சுப்பர் 8 சுற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும் குருநாகல், பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் கொழும்பு, சோன்டர்ஸ் அணியை ஞாயிறு இரவு 8 மணிக்கு எதிர்கொள்ளவுள்ளது. பெலிகன்ஸ் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளுடன் 11 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.