புதிதாக மின்னொளி பொருத்தப்பட்ட கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தின் மின்விளக்குகள் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் நேற்று முன்தினம் (28) இரவு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதனை ஆரம்பித்து வைக்கும் வகையில் மின்னொளில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, இலங்கை டி20 அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் பந்தை எதிர்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. அணிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை வளர்ந்து வரும் அணிக்கும் இடையே நட்புறவு போட்டி ஒன்றும் நடைபெற்றது. எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டே இலங்கை கிரிக்கெட் சபையின் சுமார் 1.7 பில்லியன் ரூபா முதலீட்டுடன் எஸ்.எஸ்.சி. மைதானத்திற்கு மின்னொளி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


