போதைவஸ்து கடத்தல்களை கண்காணிக்க CCTV கெமாராக்கள்

whatsapp image 2025 10 29 at 21.12.20 10 1170x878
-சகல நெடுஞ்சாலைகளிலும் அவதானம்

போதைப்பொருள் கடத்தலை தடுக்க நெடுஞ்சாலைகளில் சிசிரிவி கெமாராக்களை பொருத்துவதற்கும், இதனூடாக கண்காணிப்புகளை கூர்மையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

போதை ஒழிப்புக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ள அரசாங்கம், நாடு முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கெமாராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், வரவுள்ள 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு க கெமாராக்களை பொருத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவின் பிரகாரம் பொலிஸ் தலைமையகத்துடன் இணைந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புக்களும் பெறப்படவுள்ளதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.