19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உட்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யு.எஸ்.சி.ஐ.எஸ்) பணிப்பாளர் ஜோசப் எட்லோவின் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், கொங்கோ, ஈக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யெமன், புரூண்டி, கியூபா, வெனிசுவேலா, சியாரலியோன், டொகோ, துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் அனைத்து விண்ணப்பங்களும் முழுமையான மறுஆய்வுக்காக திருப்பி அனுப்பப்படும்.
இதில் மீண்டும் நோ்காணல்கள் நடத்தப்படலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. த கார்டியன்


