தெற்கு சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தில் ஷாண்டோ பகுதியில் அமைந்துள்ள 4 அடுக்குகளைக் கொண்ட மாடி குடியிருப்பில் நேற்று முன்தினமிரவு 9.20 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் அரை மணிநேரம் கொளுந்து விட்டு எரிந்த இந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்துள்ளனர்.
இத்தீவிபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் மருத்துவமனையில் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
குவாங்டாங் மாகாணத்திற்கு அருகாமையில் உள்ள ஹொங்கொங்கில் கடந்த மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 160 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, உயர் அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், குவாங்டாங் மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சின்ஹுவா நியூஸ்


