மழையின் இடையூறுக்கு மத்தியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி

sep12

மழையின் இடையூறுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வர்த் லுவிஸ் முறையில் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கார்டிபில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தாமதித்தே ஆரம்பித்ததோடு அதனால் அணிக்கு ஒன்பது ஓவர்கள் கொண்ட ஆட்டமாகவே நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி 7.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனைத் தொடர்ந்து ஆரம்பமான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 5 ஓவர்களில் 69 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. என்றாலும் அந்த அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களையே பெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் தென்னாபிரிக்க அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (12) மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.