மொரோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் நான்கு மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் மொரோக்கோ சந்தித்துள்ள மோசமான இரண்டாவது கட்டட விபத்து இதுவாகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நான்கு மாடிகளைக் கொண்ட இந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இடிபாடுகளில் 16 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இடிபாடுகளில் எத்தனை போ் சிக்கியிருக்கலாம் என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் கடந்த மே மாதம் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 10 பேர் உயிரிழந்தமை தெரிந்ததே. இக்கட்டடங்கள் இடிந்து விழுந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களைத் தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


