பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும் ஜவா லேன் ‘மலாய்’ பள்ளிவாசல்!

img 20260504 wa0014

Pதற்காலத்தில் பள்ளிவாசல்கள் திருத்தங்களின் போது பெரும்பாலான பள்ளிகளின் பழைய கட்டிடக் கலையை முழுமையாக தகர்த்துவிட்டு நவீன வடிவமைப்பில் கட்டிடம் அமைக்கப்படுறது.

இவ்வாறு முழுமையாக பழைய கட்டிடக் கலைகள் தரைமட்டமாக்கப்படுவதால் அழிவது வரலாறு என்பதை நம்மில் பலரது உள்ளங்கள் ஏற்க மறுக்கின்றன.

பண்டைய கால சமய, சமூக, கலாச்சார வரலாறுகளை பாதுகாக்க வேண்டியதும், மரபுகளைப் பேண வேண்டியதும் நம் ஒவ்வொருவர் மீதுள்ள தலையாயக் கடமை. அவ்வாறு பாதுகாப்படும் வரலாறுகளே எதிர்கால சமூக, சமய இருப்பகளுக்கு ஆணிவேராக அமைகின்றன.

அதனடிப்படையில், கொழும்பு 02, ஜாவா வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஜாமிஆ (Masjidul Jamiah) இதனை MALAY MILITARY MOSQUE ‘மலாய் பள்ளி’ என அழைப்பார்கள்.

இப் பள்ளிவாசலின் முழுமையான கட்டிட திருத்தப் பணிகள் இடம்பெறுகின்றன. 1864 ம் ஆண்டு (ஹிஜ்ரி 1285) ஆரம்பிக்கப்பட்ட இப் பள்ளிவாசல் இன்று வரையில் அதே கட்டிட அமைப்பில் பழைமை பொருந்தியாக காணப்படுகிறது.

இந்தப் பள்ளிவாசலினுள் இதமான குளிர் எப்போதும் காணப்படும். பரப்பில் சிறியதாயினும் பள்ளிவாசலின் தோற்றம் மிக இரம்மியமாக இருக்கும்.

இவ்வாறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பள்ளிவாயலின் புனர் நிர்மானப் பணிகள் மிகவும் நுணுக்கமாக இடம்பெறுகிறது.இதில், மெச்சத்தக்க வேண்டிய விஷேடம் என்னவென்றால் திருத்தியமைக்கப்படும் புதிய கட்டிட அமைப்பில் பழைய பள்ளிவாசலின் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுத் தோற்றப்பாடுகள் எதிலும் மாற்றம் இல்லை என்பதாகும்.

தற்கால நவீன நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும்முழுமையாக இதன் கட்டிடக் கலை வரலாற்றை சிதைவடையச் செய்யவில்லை என்பது குறித்த நிர்வாகத்தின் வரவேற்கத்தக்க முன்மாதிரியான அம்சமாகும்.

குறித்த பள்ளிசலின் நிர்வாகத்தினரால் பள்ளிவாசலில் கட்சிப்படுத்தப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய கட்டிட அமைப்பு உட்பட அதற்கான நிதி அறவீட்டு முறை ஆகியன படங்களை இக் கட்டுரையுடன் இணைத்துள்ளேன்.

உண்மையிலேயே, தற்காலத்தில் எவ்வித தூரநோக்குமின்றி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு பழைய கட்டிடக் கலைக்கு எவ்வித சம்பந்தமுமே இல்லாமல் நவீனம் என்ற பொறிமுறையை மட்டும் உட்புகுத்தி வரலாறுகளை சிதைத்து, வரலாற்று தடயங்களே இல்லாத அளவுக்கு பள்ளிவாசல்களை அழகுபடுத்தும் நிர்வாகங்களுக்கு இவ்வாறன பள்ளிவாசல்களின் திருத்தப் பணிகளும், வரலாறு அழிக்கப்படாத புதிய வடிவமைப்புக்களும் சமர்ப்பணம்!✍️ கியாஸ் ஏ. புஹாரி