மாலத்தீவு சந்தையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டுகிறது FHAM 2026!

img 20260501 wa0028

உணவு மற்றும் விருந்தோம்பல் ஆசியா மாலைத்தீவு (FHAM) 2026 கண்காட்சி எதிர்வரும் 2026 செப்டம்பர் 7 முதல் 9 வரை மன்ஹாட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறும். இது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த உலகளாவிய உற்பத்திகள்;, பிராந்திய விநியோகஸ்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஒன்றிணைப்பதாகும்.

மாலத்தீவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள குர்யுஆ, நாட்டில்; வேகமாக வளர்ந்து வரும், இறக்குமதியைச் சார்ந்த சுற்றுலாத் துறையுடன் சர்வதேச விநியோகஸ்தர்களை இணைக்கும் ஒரு முக்கிய தளமாகத் தொடர்ந்து செயல்படுகிறது. உணவுப் பொருட்கள், ஹோட்டல் உபகரணங்கள், கருவிகள் மற்றும் சேவைத் தீர்வுகளுக்கான வலுவான தேவையுடன், இந்த நிகழ்வு இலங்கை உட்பட பிராந்திய சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க வர்த்தக மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CDC Events & Travels நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இம்ரான் ஹசன், இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்ததாவது,

‘FHAM, விநியோகஸ்தர்களை இணைப்பது, நகர ஹோட்டல்கள், உணவகங்கள், ‘கஃபேக்கள்’, ‘கேட்டரிங்’ நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு மூலோபாயB2B தளமாகச் செயல்படுகிறது. இது வலுவான வர்த்தக உறவுகளின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, விருந்தோம்பல் துறை முழுவதும் வணிக வாய்ப்புகளை எளிதாக்குகிறது.’

இந்த வர்த்தகக் கண்காட்சியில் உணவு மற்றும் பானங்கள், விருந்தோம்பல் பொருட்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் மற்றும் பேக்கரி, இனிப்பு பண்டங்கள், தேநீர், ‘காபி’ மற்றும் ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புக்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகள் இடம்பெறும்.

கூடுதலாக, மாலைத்தீவுகள் முழுவதும் உள்ள 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து முயற்சியாளர்களை ஈர்க்கும் வகையில், சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட போட்டிகளையும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளையும் FHAM நடத்தும். இவற்றில் உலகளாவிய சமையல் சவால்கள், அலங்காரப் போட்டி உட்பட பல அடங்கும்.

மாலைத்தீவுகள் தனது சுற்றுலாத் துறைக்கு இறக்குமதிகளையே பெரிதும் நம்பியிருப்பதால், பிராந்திய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதிலும், அண்டைய சந்தைகள், குறிப்பாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிப்பதிலும் FHAM ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.வர்த்தகம், வலையமைப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், FHAM 2026 பிராந்திய விருந்தோம்பல் துறைக்குள் வணிக வளர்ச்சி மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வழங்கும்; ஒரு முக்கியத் தளமாகத் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – என்றார்.