– 254 ஓட்டங்கள் குவித்து சாதனை
நடப்பு ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப்-1 ஆட்டத்தில் சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களில்வீழ்த்தி மே.தீவுகள்அணி மெகா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது மே.தீவுகள்அணி.
இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 254 ஒட்டங்கள் குவித்தது.
இதன் மூலம்T20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2ஆவது அணி என்ற சாதனையை மே.தீவுகள் படைத்தது. இந்த வகை சாதனையில் 2007ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 260 ஒட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.
T20 உலகக் கிண்ணத்தில் மே.தீவுகள் அணியின் அதிகபட்ச ஓட்டங்கள் குவிப்பாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி 2024ஆம் ஆண்டு தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 218 ஒட்டங்கள் குவித்திருந்தது.
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ஒட்டங்கள் விளாசி மிரளச் செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரோவ்மன் பவல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ஒட்டங்கள் விளாசினார்.
ஷெர்பேன் ரூதர்போர்டு 13 பந்துகளில், 31 ரன்களும் ரோமாரியோ ஷெப்பர்டு 10 பந்துகளில், 21 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 4 பந்துகளில் 13 ஓட்டங்களும் சேர்த்தனர். முன்னதாக பிரண்டன் கிங் 9, கேப்டன் ஷாய் ஹோப் 14 ஓட்டங்களில் வெளியேறினர்.
சிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்டு நரவா, பிளெசிங் முசாராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 255 ஒட்டங்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 87 ஒட்டங்கள் எடுத்து தடுமாறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
மருமானி 14, பென்னட் 5, ரியான் பர்ல் 0, டியான் மேயர்ஸ் 28, கேப்டன் ராஸா 27, முசேக்வியா 0, முன்யோங்கா 14, கிரேம் க்ரீமர் 0, முசாராபானி 0, எவான்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 17.4 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது சிம்பாப்வே அணி. இதன் மூலம் 107 ஓட்டங்களில் மே.தீவுகள் அணி வெற்றி பெற்றது. அதோடு அந்த அணியின் நெட் ரன் ரேட் +5.350 என உள்ளது. இது இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த பிரிவில் உள்ள அணிகளில் சில தலா 4 புள்ளிகளை பெற வாய்ப்புள்ளது. அப்போது ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
மே.தீவுகள் தரப்பில் 4 ஓவர்களில் வீசிய மோட்டி, 28 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஹுசைன் 3, மேத்யூ 2, ஹோல்டர் 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஹெட்மயர் வென்றார்.
T20 உலகக் கிண்ண சூப்பர் 8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளில், 85 ஒட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். முன்னதாக அவர், தனது 8ஆவது அரை சதத்தை 19 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் விளாசினார்.
இதன் மூலம் அவர், T20 உலகக் கோப்பை வரலாற்றில் மே.தீவுகள் அணிக்காக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்திருந்த தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் அவர், நடப்பு உலகக் கிண்ண தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 22 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.


