முறையான கல்விச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினால் ஆதரவு

1.28

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.விசேட காணொளி ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

முறையான கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தினால் ஆதரிக்கத் தயார்.

தரம் 06 ஆம் ஆண்டுக்கான கல்விச்சீர்திருத்தங்களால் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீர்திருத்தத்தை முறைாயாக முன்னெடுக்காமையே இதற்கு காரணம்.கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்துவதற்கு அரசு முயன்றது.இருந்தபோதிலும்,சீர்திருத்தங்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசே இடைநிறுத்தியது.ஆறாம் தரம் முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்தனர். இருந்தாலும், அரசு இதனை ஒத்திவைத்ததன் காரணமாக அவர்களின் எதிர்பார்புகள் கானல்நீராக மாறியுள்ளன.எனவே, கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, ஆபாச விடயங்களை நீக்கி, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.கல்வித்துறையில் முற்போக்காகச் செயற்படும் நிபுணர்களும் உள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடி முற்போக்கான முடிவை எடுக்குமாறு யோசனை முன்வைக்கிறேன்.