மலையக மக்கள் ஒன்றியத்தின் பிரித்தானிய கிளை நிதியுதவி

dailynews650 149

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட புயல், வெள்ளம்,மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ‘மலையக மக்கள் ஒன்றியத்தின் பிரித்தானிய கிளை, 5000 ஸ்டேர்லிங் பவுண்ட் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான காசோலை பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரக உயர் ஸ்தானிகர் நிமால் சேனாதீரவிடம் கையளிக்கப்பட்டது.மலையகமக்கள் ஒன்றிய தலைவர் சிவசங்கர்,பொதுச்செயலாளர் திருமதி. மதிவதனா,பொருளாளர் பாலசேகர், செயற்குழு உறுப்பினர்களான மணியம்,ரவி ரவீந்திரன், கரு ரட்ணம்,திருமதி.தாரனி,யோகச்செல்வம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.