பத்து புதிய வகை மருந்துகளை அறிமுகப்படுத்த திட்டம்

01 11
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தகவல்

இந்த ஆண்டில் பத்து புதிய வகையான மருந்துகளை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அந்த வகையில் இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகளை உள்ளூரில் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டது. தற்போது 70 வகையான மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.வரலாற்றில் அதிகளவான மருந்து உற்பத்திகளை கடந்த வருடத்தில் முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கமைய 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்துள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. ஒரு மாதத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய மருந்து உற்பத்தியான 385 மில்லியன் மாத்திரைகளை கடந்த மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்துள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

மேலும் கடந்த வருடத்தில் 5 புதிய மருந்துகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.2025ஆம் ஆண்டில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.