வெள்ளத்தினால் சேதமடைந்த நாயாற்று பாலம் புனரமைப்பு

12.2 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த நாயாற்று பாலத்தின் புனரமைப்பு பணிகள் முடிவுறும் நிலையில் காணப்படுகின்றது.

கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தொடக்கம் இவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வெலிஓயா போன்ற பகுதிகளுக்கான பஸ் மற்றும் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடற்படையினர் படகுகள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாயாற்று பகுதியிலுள்ள இரண்டு பாலங்கள் உடைப்பெடுத்த நிலையில் இதனை சீர்செய்யும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரும் இணைந்து சீர்செய்து வருகின்றனர். கடந்த மாதம் இரண்டு பாலங்களில் ஒரு பாலம் சீர்செய்யப்பட்ட நிலையில் மற்றைய பாலம் சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. இவ்வீதி ஊடான போக்குவரத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மக்கள் பாலத்தின் ஊடாக நடந்து சென்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது.