– தேசிய போஷாக்குத் திட்டத்திற்கு KOICA நிறுவனத்தின் உதவி
தேசிய போஷாக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தரமான சோள உற்பத்தியை அதிகரித்து திரிபோஷா விநியோகத்தைப் பலப்படுத்த ‘பயிரிடுவோம் கட்டியெழுப்புவோம்’ எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இதற்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் அநுராதபுரம், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த 7,500 சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு நன்மைகள் கிடைக்கும். 2025- 2029 காலப் பகுதியில் குறித்த கருத்திட்டத்தை நடாத்த நடைமுறைப்படுத்த கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


