ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த ஸாஜித் கலீலுர்ரஹ்மான் எனும் இளைஞன் வரலாற்றுத் தடம் பதித்துள்ளார்.
இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும் National level flood light league; knockout tennis cricket tournament எனும் இந்திய கிரிக்கெட் போட்டிக்கு ஹெம்மாத்தமை பிரதேசத்திலிருந்து முதல் தடவையாக ஸாஜித் தெரிவாகியுள்ளார்.
இப்போட்டியானது இந்தியாவில் சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரபலமான போட்டியாகும்.
கர்நாட்டக்கா பிரதேசத்தில் எதிர்வரும் 27ம் திகதி முதல் 30 திகதிவரை Davangere District Stadium இல் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி Sahara Sri Lanka Squad எனும் அணி இந்தியாவிற்கு சென்று களமிறங்கவுள்ளது.
பலவருடங்களாக இந்தியாவிற்கு சென்று போட்டியிடும் இலங்கை அணிக்கு கேகாலை மாவட்டத்தில் இருந்து தெரிவாகியுள்ள இரண்டாவது போட்டியாளராக ஸாஜித் திகழ்கிறார்.
இவர் நாடளாவிய ரீதியில் பல கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையைக் காட்டி வளர்ந்துவரும் போட்டியாளராவார்.
மேலும் இவர் தனது குறுகிய வயதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் கிண்ணங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.


