எசட்லைன் ஃபினான்ஸ் உலக சிறுவர் தினம் 2025 ஐ சிறுவர் ஓவிய போட்டியுடன் கொண்டாடியது.
உலக சிறுவர் தினம் 2025 ஐ முன்னிட்டு, எசட்லைன் ஃபினான்ஸ், சிறுவர் ஓவியப் போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 2025 ஒக்டோபர் 4 ஆம் திகதி, நாட்டின் பல பாகங்களையும் உள்வாங்கி இந்த போட்டியை முன்னெடுத்திருந்தது. சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையிலும், உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இந்த போட்டியை எசட்லைன் ஃபினான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. நிதிச் சேவைகளை வழங்குவது என்பதற்கு அப்பால் மக்களில், குடும்பங்களில் மற்றும் சமூகங்களில் முதலீடு என்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எசட்லைன் ஃபினான்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போட்டி, தேசத்தின் இளம் பராயத்தினர் மத்தியில் சுய வெளிப்பாடு மற்றும் சிந்தனை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநோதம், உள்ளடக்கம் மற்றும் சமூக ஈடுபாடு போன்ற சூழலில் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவதற்கு இந்த கட்டமைப்பு வாய்ப்பை வழங்கியிருந்தது.அடுத்த தலைமுறையினரை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக எசட்லைன் ஃபினான்ஸ் உலக சிறுவர் தின செயற்பாடு அமைந்திருந்தது. சிறுவர்களின் ஓவிய போட்டி, அவர்களுக்கு தமது சுய வெளிப்பாட்டை காண்பிக்க வாய்ப்பை வழங்கியிருந்தமை மட்டுமன்றி, சமூக ஈடுபாடு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றை வலிமைப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.ஒவ்வொரு போட்டியாளருக்கும் சான்றிதழ் மற்றும் விசேட அன்பளிப்புக்கள் போன்றன வழங்கப்பட்டன.இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் 2011 ஆம் ஆண்டின் நிதி வியாபார சட்ட இல. 42 இன் கீழ், அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்வதுடன், லங்கா ரேட்டிங் ஏஜென்சி அமைப்பிடமிருந்து A (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. மேலதிக தகவல்களுக்கு, www.assetlinefinance.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கலாம்.


