வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

wld02 1

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து ஜனாதிபதி ட்ரம்ப், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து திரி பித்தளை விளக்கை ஏற்றி, தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை அவர் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப், ‘இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றுதான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். ஒரு சிறந்த உரையாடல் நடந்தது. வர்த்தகம் பற்றிப் பேசினோம். அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.பாகிஸ்தானுடன் எந்தப் போரும் வேண்டாம் என்று நாங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினோம். வர்த்தகம் குறித்து மோடியுடன் பேசியது உண்மைதான். பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் எங்களுக்கு எந்தப் போரும் இல்லை. மோடி ஒரு சிறந்த மனிதர், அவர் பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சிறந்த நண்பராகிவிட்டார்.இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி என்பதைக் குறிக்கிறது’ என்றார்.

டைம்ஸ் ஒப் இந்தியா