இறக்குமதி அரிசிகளுக்கு: உச்சபட்ச விலை வர்த்தமானி

mrp extra gazette for imported rice
– பச்சை: ரூ.210; நாடு: ரூ.220; சம்பா: ரூ.230; பொன்னி: ரூ.240; பால் பொன்னி: ரூ. 255

இறக்குமதி செய்யப்படும் பல்வேறு அரிசிகளுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம்
பச்சை அரிசி – ரூ. 210
நாட்டு அரிசி – ரூ. 220
சம்பா அரிசி – ரூ. 230
(GR11) பொன்னி சம்பா – ரூ. 240
(GR11) பால் பொன்னி சம்பா – ரூ. 255 என குறிப்பிடப்பட்டுள்ளது.