இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் மிக கோலாகலமாக
பொல்கஹவெல அல் அக்ஸா முஸ்லிம் வித்தியாலய திறந்த வெளி அரங்கில் முஸ்லிம் சேவையின் பேரபிமானிகள் பலரின் கைகோர்ப்போடு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களோடு பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதே மேடையில் ‘இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பாரம்பரியம்’ நூலினை அதிபர் ஏ.ஜே.எம். மர்சூகுக்கு முஸ்லிம் சேவைப்பணிப்பாளர், எம். ஜே. பாத்திமா ரினூஷியா, அன்றைய நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட தயாரிப்பாளர் ஏ.எம்.எம்.ரலீம் ஆகியோர் நூல் ஆசிரியர் எம்.எஸ்.எம். ஜின்னவோடிணைந்து வழங்கும்போது எடுத்த படம்.


