பாடசாலைகளுக்கு நாளை முதல் புத்தாண்டு விடுமுறை

4.10
– ஏப்ரல் 20 இல் இரண்டாம் தவணை ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை (11) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பாடசாலைகளுக்கான 2ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவ்வாறு ஆரம்பிக்கப்படும் 2ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.