வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன ‘சோய் ஹியோன்’ போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய இரண்டு ‘குரூஸ்’ ஏவுகணைகள் மற்றும் மூன்று கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் இதன் போது ஏவப்பட்டன. இவை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சோதனையை நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் அன், கடற்படையின் அணு ஆயுதத் திறனை எல்லையற்ற வகையில் விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.


