இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாட்கள் போர்நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

img 20260416 wa0119 1

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தம் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இன்று முதல் இந்த போர்நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நிரந்தர அமைதியை ஏற்படுத்த துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ தலைமையிலான குழுவிற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

“உலக அளவில் நான் தீர்க்கும் 10-வது போர் இது” என ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

விரைவில் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளனர்.