ஹிஜ்ரி 1447 துல் கஃதஹ் மாதத்திற்கான தலைப் பிறைநாட்டில் தென்பட்டதற்கான ஊர்ஜிதம் செய்யப்பட்ட சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் 2026.04.18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை மஃரிபுடன் துல் கஃதஹ் மாதத்தை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1447 துல் கஃதஹ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, ஷவ்வால் பிறை 29 ஆவது நாளாகிய 2026 ஏப்பிரல் 18 ஆம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவரான மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் (அல் ஃபத்தாஹி) தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு மற்றும் முஸ்லிம் சமய கலாசார பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்த்யோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மேறபடி தீர்மானம் மேறகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



