254 ஆண்டு கால முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக நியூசிலாந்தின் பிரெட் ரண்டல் வரலாறு படைத்துள்ளார்.
நியூசிலாந்தின் பிளன்கட் கேடயத்திற்காக சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸின் வேகப்பந்து வீச்சாளராக ரண்டல், நோர்த் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்தார். முதல் இன்னிங்ஸில் தனது இரண்டாவது ஓவரின் கடைசி பந்திலும் தனது மூன்றாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளிலுமே அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரண்டல் தனது 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து விக்கெட் வீழ்த்தப்படுவது இது முதல்முறை என்றபோதும் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பந்து வீச்சாளர் ஒருவர் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதும் இது முதல்முறையல்ல.
2025 ஜூலையில் உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் அயர்லாந்து வீரர் கர்டிஸ் கம்பர் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
மகளிர் கிரிக்கெட்டில் சிம்பாப்வே சகலதுறை வீராங்கனை கலிஸ் நித்லோவா 2024 இல் 19 வயதுக்கு உட்பட்ட டி20 உள்ளூர் போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


