ஈரானின் ஆன்மிக தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு – இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு

mar 4

ஈரானின் ஈரான் ஆன்மிக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி (Mojtaba Hosseini Khamenei), அந்நாட்டின் அடுத்த உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் ‘நிபுணர்கள் சபை’ (Assembly of Experts) கமேனியின் வாரிசாக இவரைத் தெரிவு செய்துள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஈரானை சுமார் 36 ஆண்டுகள் ஆட்சி செய்த அயதுல்லா கமேனி, கடந்த பெப்ரவரி 28 அன்று அவரது வசிப்பிடத்தில் இருந்தபோது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் கமேனியுடன் அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கமேனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பாகர்சாதே (Mansoureh Khojasteh Bagherzadeh), சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் மேலதிக விபரங்களும் ஈரானிய அரசாங்கத்தினால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமேனியின் உடல் புனித நகரமான மஷ்ஹத்தில் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.