அமெ., இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் ஈரானின் பதில் தாக்குதல்களும் அதிகரிப்பு துருக்கி, டுபாயில் அமெரிக்க தூதரகமும் இலக்கு: ஈரானில் உயிரிழப்பு 1,045 ஆக உச்சம்: லெபனானிலும் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேற்றம்

mar 5

ஈரானின் பல இடங்களிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடித்ததோடு லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில் பிராந்தியம் முழுவதும் ஈரான் நடத்தும் பதில் தாக்குதல்கள் போரை மேலும் தீவிரம் அடையச் செய்துள்ளது. ஐந்தாவது நாளாக நீடித்த இந்தப் போர் முடிவுக்கான எந்த சமிக்ஞையும் இன்றி உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல்வேறு இடங்களிலும் நேற்று (04) வெடிப்புகள் இடம்பெற்றதாக அரச சார்பு டஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய டெஹ்ரானில் கட்டட இடிபாடுகளின் காட்சிகளை ஈரான் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. புனித நகரான குவாம் மற்றும் ஏனைய பல நகரங்களும் இலக்காகியுள்ளன.

மறுபுறம் இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டபோதும் மக்கள் பாதுகாப்பு முகாம்களை நோக்கி ஓட்டம்பிடித்தனர். தாக்க வரும் ஏவுகணைகள் இடைமறிப்பு செய்யும் வெடிப்புச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக ஈரானில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பதாகவும் மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லும்படியும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜெரூசலம், டெல் அவிவ் மற்றும் ஏனைய பகுதிகளில் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் எந்த ஒரு பாதிப்புகள் தொடர்பான விபரமும் கிடைக்கவில்லை என்று இஸ்ரேல் அவசர மருத்துவ சேவை தெரிவித்துள்ளது. முன்னதாக ஈரானின் ஏவுகணை ஒன்று விழுந்ததில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நிர்வாகம் உறுதி செய்திருந்தது.

ஈரான் தனது பதில் தாக்குதல்களை இஸ்ரேலுக்கு மத்திரம் அன்றி வளைகுடா நாடுகள் முழுவதிலும் நடத்தி வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் பிராந்தியத்தில் பல தளங்களையும் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் ஒரு மாதம் நீடிக்கும் என்று அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியபோதும் இந்த மோதல் பிராந்தியம் எங்கும் தீவிரமாக பரவி வருகிறது.

பெய்ரூட் புறநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீதும் கிழக்கு லெபனானில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் மீதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களை நடத்தியதோடு குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லெபனான் மக்களை வெளியேறும் உத்தரவுகளை பிறப்பித்து வரும் இஸ்ரேல் லெபனானுக்குள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று தீவிரமாக இருந்ததோடு சனநெரிசல் மிக்க அந்தப் பகுதியில் ஹிஸ்புல்லாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை 50 இற்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லா அமைப்பு ஓர் ஆண்டுக்கு மேலான காலத்தில் முதல் முறை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இதேNநேரம் ஈரானிய படையினரை இலக்கு வைத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் அனைத்து தன்னார்வ படைகளிடம் தொடர்புபட்ட கட்டடங்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,045 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டி டஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் கடந்த சனிக்கிழமை தெற்கு நகரான மினாபில் பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரும் எண்ணிக்கையான சிறுமிகள் உட்பட 165 பேர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. நிபுணர் குழு ஒன்று கவலை தெரிவித்துள்ளது.

‘குழந்தைகள் காயமடைந்து மன அழுத்தத்திற்குள்ளாகி, பல இளம் உயிர்கள் பலியானதாக கூறப்படும், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்துள்ள தகவல்களால் குழு மிகுந்த கவலையடைந்துள்ளது’ என்று மேற்படி சிறுவர்கள் உரிமைக்கான ஐ.நா குழு குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் துருக்கியை நோக்கி வந்த பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை நேட்டோ பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துள்ளது. இவ்வாறு இடைமறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் மத்தியதரைக் கடலுக்கு அருகில் இருக்கும் டோர்டியோல் மாவட்டத்திற்கு அருகே விழுந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

‘யார் எம் மீது அச்சுறுத்தல் விடுத்தபோதும் எமது ஆட்புலம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் துருக்கிக்கு உள்ளது’ என்று அந்த அமைச்சு விடுத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘பிராந்தியத்தில் மோதலை மேலும் பரப்பக்கூடிய செயல்களில் ஈடுபடாமல் இருக்க அனைத்து தரப்பினரையும்’ அது கேட்டுள்ளது.

இதேநேரம் டுபாயில் உள்ள அமெரிக்க துணைத் தூதரத்தின் மீது ஈரான் நடத்தி ஆளில்லா விமானத் தாக்குதலில் அந்தத் தூதரகத்தில் பாரிய அளவில் தீ பரவியுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானின் இரு ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் சவூதி அரேபிய தலைநகர் ரியாதில் இருக்கும் அமெரிக்க தூதரகமும் சேதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்குள் ஏழு ஆளில்லா விமானங்கள் விழுந்ததாகவும் மூன்று பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 121 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியாதாகவும் ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. மறுபுறம் ஈரானில் இருந்து வீசப்பட்ட 10 ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 ஏவுகணைகளை இடைமறித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்ததாக சவூதி அரேபியா கூறியது. இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று சவூதி பாதுகாப்பு அமைச்சு எக்ஸ் தளத்தில் தெரிவத்தது.

எனினும் இங்கு ஏற்கனவே ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதலில் தீ பரவியதோடு இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை சில நாட்களுக்கு முன்னரே சவூதி நிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு ஈராக்கின் சுயாட்சி பகுதியான குர்திஷ் பிராந்தியத்தின் டகாலா நகரில் உள்ள ஈரானிய குர்திஷ் எதிர்க்கட்சி குழு ஒன்றின் தலைமையகத்தில் உள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நேற்று ஆளில்ல விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய அரசுக்கு எதிரான தாக்குதல்களுடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுவுக்கு அடைக்கலம் வழங்குவதாக ஈராக் குர்திஷ் நிர்வாகத்திற்கு ஈரான் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததோடு ஈரான் புரட்சிக் காவல்படை கடந்த காலத்திலும் அதன் இலக்குகள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமேனியின் இறுதிக் கிரியை ஒத்திவைக்கப்பட்டதாக ஈரானின் டஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த இறுதிக் கிரியையில் பல்வேறு மாகாணங்களில் உள்ள மக்களை அழைப்பது உட்பட ஏற்பாட்டியல் பிரச்சினைகள் காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த உயர்மட்ட தலைவரின் தேர்வு நெருங்கி இருப்பதாக ஈரானின் பலம்மிக்க பாதுகாவலர் சபை மற்றும் நிபுணர்களின் சபை உறுப்பினராக இருக்கும் அந்நாட்டின் மூத்த அறிஞர்களில் ஒருவரான அயதொல்லா அஹமது கத்தாமி குறிப்பிட்டுள்ளார். ‘உயர்மட்ட தலைவர் மிக விரைவாக, உகந்த நேரத்தில் அடையாளம் காணப்படுவார். நாம் முடிவை நெருங்கியுள்ளோம். என்றபோதும், நாட்டில் போர் சூழல் நிலவுகிறது’ என்று கத்தாமி அரச தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை வடக்கு ஈராக்கின் சுயாட்சி பகுதியான குர்திஷ் பிராந்தியத்தின் டகாலா நகரில் உள்ள ஈரானிய குர்திஷ் எதிர்க்கட்சி குழு ஒன்றின் தலைமையகத்தில் உள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நேற்று ஆளில்ல விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய அரசுக்கு எதிரான தாக்குதல்களுடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுவுக்கு அடைக்கலம் வழங்குவதாக ஈராக் குர்திஷ் நிர்வாகத்திற்கு ஈரான் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததோடு ஈரான் புரட்சிக் காவல்படை கடந்த காலத்திலும் அதன் இலக்குகள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமேனியின் இறுதிக் கிரியை ஒத்திவைக்கப்பட்டதாக ஈரானின் டஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த இறுதிக் கிரியையில் பல்வேறு மாகாணங்களில் உள்ள மக்களை அழைப்பது உட்பட ஏற்பாட்டியல் பிரச்சினைகள் காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த உயர்மட்ட தலைவரின் தேர்வு நெருங்கி இருப்பதாக ஈரானின் பலம்மிக்க பாதுகாவலர் சபை மற்றும் நிபுணர்களின் சபை உறுப்பினராக இருக்கும் அந்நாட்டின் மூத்த அறிஞர்களில் ஒருவரான அயதொல்லா அஹமது கத்தாமி குறிப்பிட்டுள்ளார். ‘உயர்மட்ட தலைவர் மிக விரைவாக, உகந்த நேரத்தில் அடையாளம் காணப்படுவார். நாம் முடிவை நெருங்கியுள்ளோம். என்றபோதும், நாட்டில் போர் சூழல் நிலவுகிறது’ என்று கத்தாமி அரச தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கமேனியின் உயிருடன் இருக்கும் அதிகாரம் மிக்க மகனான மொஜ்தபா கமேனி அடுத்த உயர்மட்டத் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இரு ஈரானிய தரப்பினரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.