சுப்பர் எட்டு போட்டிகள் நாளை முதல் ஆரம்பம்

feb20

டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பச் சுற்று போட்டிகள் இன்று (20) நடைபெறும் பி குழுவுக்கான அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடையவுள்ளது.

கண்டி, பல்லேகலவில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் ஆடும் இரு அணிகளும் சுப்பர் எட்டு வாய்ப்பை இழந்திருப்பதால் இன்றை ஆட்டம் அடுத்த சுற்றில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

சுப்பர் எட்டு சுற்றுக்கான எட்டு அணிகளும் ஏற்கனவே தெரிவாகி இருக்கும் நிலையில் நாளை தொடக்கம் அந்த சுற்றுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. தெரிவாகி இருக்கும் எட்டு அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் குழு 1 இல் நடப்புச் சம்பியன் இந்தியாவுடன் சிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு 2 இல் இலங்கையுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடவுள்ளன.

சுப்பர் 8 இல் ஒரு அணி தமது குழுவில் உள்ள மற்ற அணியுடன் ஒருமுறை மோதவிருப்பதோடு முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

சுப்பர் எட்டு போட்டிகள்

பெப். 21 – பாகிஸ்தான் – நியூசிலாந்து, ஆர். பிரேமதாச – இரவு 7

பெப். 22 – இலங்கை – இங்கிலாந்து, பல்லேகல – மாலை 3

பெப். 22 – இந்தியா – தென்னாபிரிக்கா, அஹமதாபாத் – இரவு 7

பெப். 23 – சிம்பாப்வே – மேற்கிந்திய தீவுகள், வான்கடே – இரவு 7

பெப். 24 – இங்கிலாந்து – பாகிஸ்தான், பல்லேகல – இரவு 7

பெப். 25 – இலங்கை – நியூசிலாந்து, ஆர். பிரேமதாச – இரவு 7

பெப். 26 – மேற்கிந்திய தீவுகள் – தென்னாபிரிக்கா, அஹமதாபாத் – மாலை 3

பெப். 26 – இந்தியா – சிம்பாப்வே, சென்னை – இரவு 7

பெப். 27 – இங்கிலாச்து – நியூசிலாந்து, ஆர். பிரேமதாச – இரவு 7

பெப். 28 – இலங்கை – பாகிஸ்தான், பல்லேகல – மாலை 3

மார்ச் 01 – சிம்பாப்வே – தென்னாபிரிக்கா, டெல்லி – மாலை 3

மார்ச் 01 – இந்தியா – மேற்கிந்திய தீவுகள் – ஈடன் கார்டன் – இரவு 7