– வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்
எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் (Tickets) விற்றுத் தீர்ந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால், நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மைதானங்கள் அல்லது விற்பனை மையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போட்டி விபரங்கள்:
திகதி: எதிர்வரும் 16 ஆம் திகதி, திங்கட்கிழமை
நேரம்: இரவு 7.00 மணி
இடம்: பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
பல்லேகலை சர்வதேச மைதானம் சுமார் 35,000 பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கக்கூடிய வசதியைக் கொண்டது.
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான கேள்வி அதிகமாக இருந்த நிலையில், தற்போது மைதானத்தின் முழுமையான கொள்ளளவுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


